தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தகுதியுள்ள சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: 14 ஆண்டு கால கோரிக்கை

தகுதியுள்ள சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: 14 ஆண்டு கால கோரிக்கை

தகுதியுள்ள சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: 14 ஆண்டு கால கோரிக்கை


UPDATED : மே 12, 2026 06:41 PM

ADDED : மே 12, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2026 06:41 PM ADDED : மே 12, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: தமிழ்நாடு கல்வி தகுதி உள்ள சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் மாநில தலைவர் திருப்பதி தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் சரவணன் துவக்கி வைத்தார். மாநில பொருளாளர் வெற்றி ராஜா, செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 14 ஆண்டு கால கோரிக்கையான 8000 பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதில் 4000 பேருக்கு மேல் 50 வயதை கடந்து விட்டனர். தொடர்ந்து தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர். ஆகவே தற்போதைய த.வெ.க., அரசின் தேர்தல் வாக்குறுதியை ஏற்று எங்களது கடமையை செய்துள்ளோம். ஆகவே சட்ட சபை கூட்டத் தொடரில் எங்களது பணி நிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றனர்.

மாநிலத் துணைத் தலைவர் சாந்தாராணி மற்றும் நிர்வாகிகள் வெங்கடேசன், சகாதேவன், கலைச்செல்வன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us