தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தேர்வு நடக்கும் போதே கேள்வி மாற்றம் மருத்துவ மாணவர்கள் குழப்பம்

 எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தேர்வு நடக்கும் போதே கேள்வி மாற்றம் மருத்துவ மாணவர்கள் குழப்பம்

 எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தேர்வு நடக்கும் போதே கேள்வி மாற்றம் மருத்துவ மாணவர்கள் குழப்பம்


ADDED : மார் 08, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு தேர்வு நடக்கும் போதே இரண்டு 5 மார்க் கேள்விகள் மாற்றப் பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை மூலம் இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ்., தேர்வுகள் நடக்கின்றன. இதன்படி நேற்று சர்ஜரி பாடத்தின் 2வது தேர்வு காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடந்தது.

இதில் இரண்டு 5 மார்க் கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகள் என கூறப்பட்டது. காலை 11:30 மணிக்கு இரண்டு கேள்விகளும் மாற்றப் பட்டன.

இது பல்கலை அறிவிப்பு என தெரிவித்து புதிய கேள்விகள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுதி இருந்தாலும், அதை அடித்துவிட்டு புதிய கேள்விக்கான பதிலை எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டில் கூடுதலாக பாடங்கள் சேர்க்கப் பட்டுள்ளதாகவும், செய்முறை தேர்வுகள் இடைவெளியின்றி தொடங்குவதால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us