/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனை 5வது தளத்தில் கிடந்த உடல் பாதுகாப்பு கேள்விக்குறி
/
அரசு மருத்துவமனை 5வது தளத்தில் கிடந்த உடல் பாதுகாப்பு கேள்விக்குறி
அரசு மருத்துவமனை 5வது தளத்தில் கிடந்த உடல் பாதுகாப்பு கேள்விக்குறி
அரசு மருத்துவமனை 5வது தளத்தில் கிடந்த உடல் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : நவ 09, 2024 05:20 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் 154.84 கோடியில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் பயன்பாட்டில் உள்ளது. இங்குள்ள 5 தளங்களில் 5வது தளத்தில் நிர்வாணமாக ஆண் உடல் கிடந்தது.
போலீஸ் விசாரணையில் மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த சவுகத் அலி 54, என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட இவர் காயமடைந்ததால் எலும்பு முறிவு சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டதும் தெரியவந்தது. அங்கு இரண்டாவது தளத்தில் சிகிச்சையில் இருந்தவர் ஒரு வாரத்திற்கு முன் மாயமானார். ஐந்தாவது தளத்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இது இரண்டாவது சம்பவம். ஏற்கனவே ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்தார். மருத்துவமனை கண்காணிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் இது போன்று சம்பவங்கள் தொடர்கிறது.