sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு டிச.21ல் வினாடி-வினா போட்டி

/

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு டிச.21ல் வினாடி-வினா போட்டி

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு டிச.21ல் வினாடி-வினா போட்டி

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு டிச.21ல் வினாடி-வினா போட்டி


ADDED : டிச 18, 2024 06:54 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு டிச.21ல் வினாடி- வினாபோட்டி நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வினாடிவினா போட்டிக்கான முதல் நிலை போட்டித் தேர்வுராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.21ல் மதியம் 2:00 மணிக்கு ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் தங்கள் அலுவலகம், பள்ளி, கல்லுாரியில்பணிபுரிவதற்கான அடையாள அட்டை கொண்டுவந்தால் மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள்.தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வுகூடத்திற்கு வர வேண்டும்.

அலைபேசி, ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் ஆகிய உபகரணங்கள் அனுமதி இல்லை.முதல் நிலை போட்டியில் ஆர்வம் உள்ள அரசு ஊழியர்கள், கல்லுாரி, பள்ளிஆசிரியர்கள்,அரசு உதவிபெறும் கல்லுாரி, தனியார் கல்லுாரிகள், பொறியியல்,மருத்துவம், பாலிடெக்னிக் கல்லுாரி, ஐ.டி.ஐ, செவிலியர் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கலாம்.

இறுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 குழு தேர்வு செய்து, 38 மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்கள்பங்கேற்கும் இறுதிப்போட்டி விருதுநகரில் டிச.28ல் நடக்கிறது.முதல்பரிசு ரூ.2 லட்சம், 2-வதுரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 3-வது பரிசு ரூ.1லட்சம் வழங்கப்படும்.

சிறந்த 3 குழுக்களுக்கு தலாரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதல் நிலை போட்டிக்கு https://sites.google.com/view/rmdthirukural-quiz/home என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை 94454 77843அலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us