ADDED : மார் 24, 2025 05:54 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே, பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடைபெற்ற 31 ஆம் ஆண்டு திரு குர் ஆன் ஓதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் சாகுல் ஹமீது வரவேற்றார். ஹாஜா முகைதீன் கிராத் ஓதினார். போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2ம் இடம் ரூ.10 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.5000 வழங்கப்பட்டன.
போட்டியின் இறுதி சுற்று வரை பங்களிப்பு செய்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ 550 வழங்கப்பட்டது. கமிட்டி செயலாளர் சிராஜுதீன், பொருளாளர் பலீல் அகமது, உறுப்பினர்கள் சாதிக்அலி, சீனி சதக்கப்துல்லா, தவ்லத் பாக்கீர் பங்கேற்றனர்.