/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் வெறிநாய்கள் தொல்லை
/
திருவாடானையில் வெறிநாய்கள் தொல்லை
ADDED : ஜன 29, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : வெறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாடானை, தொண்டியில் சில மாதங்களாக வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடந்து செல்பவர்களை விரட்டுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல்மஜித் கூறியதாவது:
தொண்டியில் வெறி நாய் கடித்து ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு பள்ளிவாசல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை கடித்தன. எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

