/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடு, கோழிகளை தாக்கும் வெறிநாய்கள்: மக்கள் அச்சம்
/
ஆடு, கோழிகளை தாக்கும் வெறிநாய்கள்: மக்கள் அச்சம்
ADDED : பிப் 03, 2025 05:07 AM

தொண்டி: திருவாடானை, தொண்டி பகுதியில் வெறிநாய்கள் மான், ஆடு, கோழிகளை விரட்டி கடித்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் முறை இல்லாததால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரோட்டில் நடந்து செல்பவர்களை விரட்டுவதால் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தொண்டி கடற்கரையில் வெறி நாய் கடித்து ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. பள்ளிவாசல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை கடித்தது.
நேற்று முன்தினம் எஸ்.பி.பட்டினத்தில் முட்டி அம்பலம் தெருவில் கோழிகளை நாய்கள் துாக்கி சென்றது, அத் தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இது குறித்து எஸ்.பி.பட்டினம் அப்துல்பாக்கி கூறியதாவது- இரவு நேரத்தில் நடந்து செல்லும் பெண்களை துரத்துகிறது. ஒரே நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக திரிகிறது. வீட்டில் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், கன்று குட்டிகளை கடித்து குதறுகிறது. கண்மாய்களிலிருந்து வெளியேறும் மான்களை கடித்து ஏராளமான மான்கள் இறந்துள்ளன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

