/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
25 செம்மறி ஆடுகளை கொன்ற வெறிநாய்கள்
/
25 செம்மறி ஆடுகளை கொன்ற வெறிநாய்கள்
ADDED : ஆக 05, 2025 04:47 AM

பெருநாழி: ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே வீரமச்சான் பட்டி கிராமத்தில் நேற்று 25 செம்மறி ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியதில் பலியாயின.
வீரமச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் 35. இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வீட்டருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 25 செம்மறி ஆடுகளை நேற்று முன்தினம் பத்திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கடித்து காயங்களை ஏற்படுத்தின.
நேற்று காலை பட்டியை திறந்து பார்த்த போது 25 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. கால்நடை டாக்டர் ஆய்வுக்குப் பின் பாதுகாப்பாக புதைக்கப்பட்டன.
பரசுராமன் கூறியதாவது: ரூ.2.5 லட்சம் மதிப்பிலான செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றுள்ளன. அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.