/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் நடந்த ரேபிஸ் தடுப்பூசி முகாம்
/
ராமநாதபுரத்தில் நடந்த ரேபிஸ் தடுப்பூசி முகாம்
ADDED : செப் 29, 2024 07:41 AM

ராமநாதபுரம் : -உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நாய்களுக்கு கால்நடைத்துறை சார்பில் ராமநாதபுரம் கால்நடை மருத்துவமனையில் இணை இயக்குநர் டாக்டர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடை டாக்டர் மருதுபாண்டி, அவரது குழுவினர் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ். அரசு, தேவேந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நாய்களின் உரிமையாளர்கள் தங்களது நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டனர்.
இதன் மூலம் ரேபிஸ் நோய் தாக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
* கீழக்கரை நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கீழக்கரை கால்நடை மருத்துவமனையில் செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசியை டாக்டர் லீலாவதி தலைமையில் போட்டனர். நோய் புலனாய்வுப் பிரிவு இணை இயக்குனர் டாக்டர் ஜான் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.