ADDED : நவ 05, 2024 04:54 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே மலட்டாறு சந்திப்பில் உள்ள பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வக ஆசிரமத்தில் ராகுகால பூஜை நடந்தது.
முன்னதாக ஆசிரம நிர்வாகி அழகுதுரை சிங்கம் பூவேந்திய நாதர் கோயில் தல விருட்சம் முன்னை மரம், வில்வாகை மரங்கள் கீழே தியானம் செய்தார். பின்னர் ஆசிரமம் வந்து பூஜைகளை செய்து பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் கலைமுருகன், ராமையா, ஈஸ்வரபாண்டி செய்திருந்தனர்.
