ADDED : நவ 19, 2024 05:05 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே மலட்டாறு சந்திப்பில் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வக ஆசிரமம் உள்ளது. அங்கு ஞாயிறுதோறும் ராகுகால பூஜை நடப்பது வழக்கம்.
அதன்படி ஞாயிறு காலை முதலே ஆசிரமத்தில் குவிந்த பக்தர்களுக்கு நிறுவனர் அழகுதுரை சிங்கம் ஆசி வழங்கினார். மாலை மாரியூர் கடலில் நீராடி அருகில் உள்ள பூவேந்தியநாதர் கோயிலில் தியானம் செய்தார்.
பின்னர் ஆசிரமம் வந்து ராகுகால பூஜைகளை செய்து பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் கலைமுருகன், ராமையா, ஈஸ்வரபாண்டி செய்திருந்தனர்.
