தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராகுல்  பிறந்த நாள் விழா

 ராகுல்  பிறந்த நாள் விழா

 ராகுல்  பிறந்த நாள் விழா


ADDED : ஜூன் 19, 2026 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 10:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் லோக்சபா எதிர்கட்சி தலைவரும், காங்., எம்.பி.,யுமான ராகுல் பிறந்த நாள் விழாவை காங்., நிர்வாகிகள் கொண்டாடினர்.

ராமநாதபுரம் மாவட்ட காங்., கமிட்டி சார்பில் அரண்மனை கோட்டை வாசல் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. காங்., மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர். ராமநாதபுரம் தாலுகா நகர் காங்., கமிட்டி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் பங்கேற்ற கட்சி தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிபாலா, மாவட்ட துணைத் தலைவர் தேவகுரு போஸ், மகிளா காங்., நிர்வாகி ஆனந்தி பஞ்சவர்ணம், இளைஞர் காங்., மாவட்ட நிர்வாகிகள் அருண் பாண்டியன், நவாஸ்கனி, கவுன்சிலர்கள் கோபி, மணிகண்டன், முன்னாள் ராணுவ வீரர் கோபால் மற்றும் வட்டார தலைவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us