ADDED : ஜன 08, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன், பாம்பன் பாலத்தை ரயில்வே நிலைக்குழு எம்.பி.,க்கள் குழு ஆய்வு செய்தனர்.
பாராளுமன்ற ரயில்வே நிலைக்குழு எம்.பி.,க்கள் குழு தலைவர் சி.எம். ரமேஷ் தலைமையில் 13 எம்.பி.,க்கள் நேற்று ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.90 கோடியில் நடக்கும் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் ரூ. 530 கோடியில் பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர்.
பின் பாம்பன் புதிய துாக்கு பாலத்தின் செயல்பாடுகள் மற்றும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பணி முடியும் மாதம் குறித்து அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினர்.
இதன்பின் எம்.பி.,கள் குழு மதுரை புறப்பட்டுச் சென்றனர்.
