/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் துாக்கு பாலத்தில் ரயில்வே அதிகாரி ஆய்வு
/
பாம்பன் துாக்கு பாலத்தில் ரயில்வே அதிகாரி ஆய்வு
ADDED : ஆக 29, 2025 05:34 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தை தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித் மஞ்சுகானி ஆய்வு செய்தார்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் திறந்து மூடுவதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது. ஆக.,12ல் திறந்த போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டு 6 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது துாக்கு பாலத்தில் ரயில்கள் 10 கி.மீ., வேகத்தில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. பாலத்தின் பிரச்னை குறித்து ரயில்வே உயர் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித் மஞ்சுகானி பாம்பன் பாலத்திற்கு வந்தார். பாலத்தை இயக்கும் மென்பொருள் தொழில் நுட்பம், ராட்சத வீல்கள், இரும்பு கம்பி வடங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், புதிய துாக்கு பாலம் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்படுகிறதா என ஆய்வு செய்தேன். பாலத்தில் உள்ள பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

