ADDED : ஜன 06, 2026 05:27 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் 5வது நடைமேடையில் தண்டவாளம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஏராளமான தென், வடமாநில பக்தர்கள் வந்திறங்கி கோயிலில் தரிசனம் செய்து மீண்டும் ரயிலில் பயணித்து சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தேவைக்கு ஏற்ப உ.பி., வாரணாசி, ஒடிசா, புவனேஸ்வரர், திருவனந்தபுரம், திருப்பதி, கன்னியாகுமரி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் டூ கோவை மற்றும் மங்களூருக்கு ரயில்கள் இயக்கவும், ராமேஸ்வரம் முதல் சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் நெரிசலுடன் காணப்படும் சூழலில் தற்போது 4ம் நடைமேடை தரைதளம் அமைக்கும் பணி நீண்ட இழுபறியில் நடக்கிறது.
இந்த நடைமேடையில் நிறுத்தும் ரயில் பெட்டி நம்பர் தகவல் பலகை, குடிநீர் வசதி இல்லை. மேலும் 5ம் நடைமேடையில் தண்டவாளம் அமைக்காமல் கிடப்பில் உள்ளது.
ராமேஸ்வரத்தில் அடுத்தடுத்து புதிய ரயில்கள் இயக்கவுள்ள நிலையில், புதிய தண்டவாளம், அடிப்படை வசதிகளை துரிதமா ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
