ADDED : செப் 15, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடியில் ரயில்வே பயனாளர்கள் சங்கம் துவக்கப்பட்டு2026– 27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக புரோஸ்கான், துணைத்தலைவர் கங்காதரன், செயலாளர் உதயகுமார், இணைச் செயலாளர் ராக்கேஷ், பொருளாளர் ஜனார்த்தனன், செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் ராவ், ராஜகோபால், வெங்கடேஷ், முகமது ஷாஜகான், பாரதி, செல்வக்குமரன், சட்ட ஆலோசகர்கள் ராஜேந்திரன், பூமிநாதன் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் வந்தே பாரத், ஹூப்ளி உள்ளிட்ட அனைத்து தொலைதுார ரயில்களும் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
–––
