UPDATED : அக் 14, 2026 06:37 PM
ADDED : அக் 14, 2026 06:18 PM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடியில் நேற்று நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில் சாரல் மலையால் மக்கள் குளிர்ச்சியை உணர்ந்தனர்.
பரமக்குடியில் கடந்த சில மாதங்களாக உட்சபட்ச வெப்பநிலை 38 டிகிரி வரை சென்றது. இதனால் சித்திரை அக்னி வெயிலை மக்கள் தொடர்ந்து அனுபவித்து வந்தனர். நேற்று காலை தொடங்கி வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இருள் சூழ்ந்த நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றது.
மேலும் மதியம் 1:00 மணி தொடங்கி சாரல் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சி அடைந்தது. தொடர்ந்து 26 டிகிரி வரை வெப்பநிலை குறைந்தது.
