ADDED : ஏப் 06, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் குளிர்ந்த காற்றை அனுபவித்தனர். பலத்த காற்றில் மின்தடை ஏற்பட்டது.
சில நாட்களாக வெயலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப சலனத்தால் மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று காலையில் மிதமான மழை பெய்தது. இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, அரண்மனை சந்தை ரோடு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்ல மக்கள் சிரமப்பட்டனர்.
நடைபாதை, தள்ளுவண்டிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகரில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாகவும், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை என அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமப்பட்டனர். -
