/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளங்குளத்துார் கிராமத்தில் மழைக்கு ஓட்டுவீடு சேதம்
/
விளங்குளத்துார் கிராமத்தில் மழைக்கு ஓட்டுவீடு சேதம்
விளங்குளத்துார் கிராமத்தில் மழைக்கு ஓட்டுவீடு சேதம்
விளங்குளத்துார் கிராமத்தில் மழைக்கு ஓட்டுவீடு சேதம்
ADDED : அக் 25, 2025 04:06 AM

முதுகுளத்துார்: தொடர் மழை காரணமாக முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் ஓட்டு வீட்டின் கூரை, சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே மழைப்பெய்தது. விளங்குளத்துார் கிராமத்தை சேர்ந்த குணபால் - பானுமதி குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசிக்கின்றனர். தொடர்ந்து பெய்த மழைக்கு ஓட்டு சரிந்து விழுவது போல் சத்தம் கேட்டவுடன் 2 வயது குழந்தை துாக்கி கொண்டு குடும்பத்துடன் வெளியே சென்ற போது ஓட்டு வீட்டின் கூரை சுவர் இடிந்து விழுந்தது. உடன் வீட்டை விட்டு வெளியே சென்றதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளது. தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.