தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மழை, பனிப்பொழிவால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு 

மழை, பனிப்பொழிவால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு 

மழை, பனிப்பொழிவால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு 


ADDED : ஜன 18, 2025 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை, பனியால் கரிமூட்டம் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் பெரும்பாலான தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இம்மரங்களை வெட்டி கரி மூட்டத்தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் அதிகளவில் கரிமூட்டத்தொழில் நடக்கிறது.

பருவமழை காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கரிமூட்டம் தொழில் 4 மாதங்களுக்கு பிறகு தற்போது துவங்கியுள்ளது. அவ்வப்போது சாரல் மழை, காலையில் 8:00மணி வரை நீடிக்கும் பனிப்பொழிவால் விறகு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.

கரிமூட்டத் தொழிலாளி பி.முத்துராஜ் கூறுகையில், '20 ஆண்டுகளுக்கும் மேலாக கரிமூட்ட தொழில் செய்கிறோம். இங்கிருந்து கேரளா, உ.பி.,போன்ற மாநிலங்களுக்கு கரி அனுப்புகிறோம். சில மாதங்களுக்கு முன் டன் ரூ.3500க்கு விற்ற விறகு ரூ.500 உயர்ந்து ரூ.4000த்திற்கு விற்கிறது. விறகு விலை உயர்வு, ஆட்கள் கூலி என செலவு அதிகரித்துள்ளது. தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us