தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்


ADDED : அக் 06, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2024 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை கனமழை பெய்தது.

இதனால் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன் ஒரு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியது.

வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் ராமேஸ்வரம் கோயில் நான்கு ரத வீதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

ராமேஸ்வரம் கோயில் மேல் தளத்தில் இருந்து மழை நீர் இறங்கி சுவாமி, அம்மன் சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் குளம் போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

மழை நின்ற அரைமணி நேரத்தில் மோட்டார் மூலம் மழை நீரை வாறுகால் வழியாக கோயில் ஊழியர்கள் வெளியேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us