/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் மழை அறுவடை பணி பாதிப்பு
/
திருவாடானையில் மழை அறுவடை பணி பாதிப்பு
ADDED : ஜன 17, 2025 05:04 AM
திருவாடானை: திருவாடானை பகுதியில் திடீர் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் 26,680 எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியது. விதைப்பு பணியின் போது பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி விதைகள் முளைப்பு தன்மையை இழந்தது. விவசாயிகள் மீண்டும் விதைத்தனர்.
பயிர்கள் வளர்ந்து வரும் போது பலத்த மழையால் நிலத்தில் சாய்ந்தது. வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்றினர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களாக திடீர் மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே வயல்களில் நீர் தேங்கியதால் பெல்ட் இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகிறோம். இந்நிலையில் இரு நாட்களாக பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு போதுமான விளைச்சல் இருந்த போதும் அதிக செலவால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.