/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழைநீர்
/
முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழைநீர்
ADDED : அக் 21, 2025 03:23 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் மழைநீர் ஆங்காங்கே தேங்குவதால் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் இருந்து மதுரை, சென்னை, கோவை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்செந்துார், கும்பகோணம் உட்பட கிராம பகுதிகளுக்கு தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
முதுகுளத்துாரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக முதுகுளத்துாரில் அவ்வப்போது மழை பெய்வதால் பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். நடப்பதற்கு மக்கள் முகம் சுளிக்கின்றனர். தேங்கியுள்ள தண்ணீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.