/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெட்டுக்குளம் அரசுப் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேக்கம் மாணவர்கள் பாதிப்பு

ADDED : அக் 16, 2025 04:39 AM
ஆர்.எஸ்.மங்கலம்: வெட்டுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வெட்டுக்குளம், அழியாதான் மொழி, சித்துார் வாடி, கலங்காப்புளி, பாரனுார், ஆவரேந்தல், கண்ணாரேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பள்ளி வளாகத்தில் லேசான மழை பெய்தாலே மழைநீர் தேங்குகிறது. இதனால மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.