ADDED : டிச 20, 2024 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளை ஊராட்சியில் அங்கன்வாடி மைய கட்டடத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர்.
மண்டபம் வேதாளை ஊராட்சியில் இடையர்வலசை கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்குள்ள 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு, கல்வி, சத்துணவு வழங்கப்படுகிறது. சமீபத்தில் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் பெய்த கன மழையால் இந்த அங்கன்வாடி கட்டடத்தை சுற்றிலும் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி குளம் போல் மாறியது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அங்கன்வாடி மைய குழந்தைகளை கடிப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு இருமல், சளி தொல்லை ஏற்படுகிறது. எனவே அங்கன்வாடி கட்டடத்தை சுற்றிலும் தேங்கிய மழைநீரை அகற்ற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.