/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை அணை நீருடன் ஆர்ப்பரித்த மழைநீர்
/
வைகை அணை நீருடன் ஆர்ப்பரித்த மழைநீர்
ADDED : நவ 22, 2024 04:02 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு திறக்கப்பட்ட வைகை அணை நீருடன் மழை நீரும் சேர்ந்து பரமக்குடி வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து செல்கிறது. தொடர்ந்து 6-வது நாளாக 1800 கன அடி நீர் சென்ற நிலையில் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வைகை அணை நீர் நவ.10ல் திறக்கப்பட்டது. முன்னதாக 20 நாட்களுக்கும் மேலாக மழை நீர் வைகை ஆற்றில் சென்றது. நவ.13ல் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகணையில் இருந்து ராமநாதபுரம் பங்கீட்டு நீர் 3272 கன அடி வெளியேற்றப்பட்டது. இதன்படி 6-வது நாளாக நேற்று வைகை ஆற்றில் 1800 கன அடி வீதம் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நோக்கி சென்றது. மேலும் வலது பிரதான கால்வாயில் 684 மற்றும் இடது பிரதான கால்வாயில் 488 கன அடி தண்ணீர் செல்கிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் தெளிச்சாத்தநல்லூர் வைகை தடுப்பு அணை பகுதியில் இருந்து மழை நீர் அதிகளவில் வருகிறது. இந்த நீர் பரமக்குடி வைகை ஆறு தரைப்பாலம் வழியாக ராமநாதபுரம் நோக்கி ஆர்ப்பரித்து சென்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.