ADDED : அக் 19, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன் பக்கம் பள்ளத்தில் 2 அடி ஆழத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. அப்பகுதியில் தண்ணீர் வெளியேற வடிகால் வசதியில்லை.
பொட்டல் பச்சேரியை சேர்ந்த தன்னார்வலர் ஸ்டாலின் கூறியதாவது:
தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் பள்ளங்களில் ஆபத்தான முறையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவற்றை ஊராட்சி தனி அலுவலர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் பல தெருக்களில் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி ஆகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.