/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது
/
ராமேஸ்வரத்தில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது
ADDED : ஜன 21, 2025 05:43 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரத்தில் பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம் முன், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, கோயிலுக்குள் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.
இந்நிலையில் கனமழையால் ராமேஸ்வரம் முனியசாமி கோயில் தெரு, மாந்தோப்பு, தங்கச்சிமடம் ராஜா நகர், பாம்பன் தரவைத்தோப்பு பகுதியில் உள்ள 100க்கும் மேலான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உருவாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. நேற்று நகராட்சி, ஊராட்சி ஊழியர்கள் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம், கால்வாய் சரி செய்தும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

