/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெருக்களில் தேங்கிய மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
/
தெருக்களில் தேங்கிய மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
தெருக்களில் தேங்கிய மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
தெருக்களில் தேங்கிய மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : ஏப் 22, 2025 05:49 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் தெருக்களில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அப்பனேந்தல் கிராமத்தில் 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு தெருக்களில் போதுமான அளவு தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் உள்ளது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அப்பனேந்தல் கிராமத்தில் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் வீடுகளுக்கு முன்பு குளம் போல் தேங்குவதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வழியில் தான் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் செல்கின்றனர்.
எனவே தெருக்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.