/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லந்தோறும் தேசியக்கொடிஏற்றுங்க: விழிப்புணர்வு ஊர்வலம்
/
இல்லந்தோறும் தேசியக்கொடிஏற்றுங்க: விழிப்புணர்வு ஊர்வலம்
இல்லந்தோறும் தேசியக்கொடிஏற்றுங்க: விழிப்புணர்வு ஊர்வலம்
இல்லந்தோறும் தேசியக்கொடிஏற்றுங்க: விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 12, 2025 11:14 PM

ராமநாதபுரம்,: சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கோட்டஅஞ்சல் துறை சார்பில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றவலி யுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்துஊர்வலத்தை கோட்ட கண்காணிப் பாளர் தீத்தாரப்பன் துவக்கி வைத்தார்.
ஆக.,15ல் சுதந்திர தினத்தன்று இல்லந் தோறும் தேசியக்கொடி ஏற்றிட வலியுறுத்தி அரண்மனை, சாலைத்தெரு, அக்ரஹாரவீதி உள்ளிட்டமுக்கிய ரோடுகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தலைமை அஞ்சலக அதிகாரி சேக்தாவூத், அஞ்சலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். அனைத்து அஞ்சலகங்களிலும் ரூ.25க்கு தேசியக்கொடி விற்பனை நடக்கிறது.
மொத்தமாக வேண்டுவோர் வணிக அதிகாரியை 97865 35813 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.