ADDED : ஜன 06, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் நடந்த விபத்தில் ராஜஸ்தான் யாத்ரீகர் பலியானார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் பகவத்சிங் 60. இவர் உறவினர்களுடன் நான்கு வேன்களில் ராமேஸ்வரம் யாத்திரை சென்று மதுரை திரும்பினர். பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை என்ற இடத்தில் நான்கு வழிச் சாலையில் வாகனத்தை நிறுத்திய போது சாலையை கடக்க முற்பட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் பகவத்சிங் பலியானார். பார்த்திபனூர் போலீசார் கார் டிரைவர் அசன் இப்ராஹிம் 45, கைது செய்யப்பட்டார்.