ADDED : மார் 09, 2026 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மத்திய மாவட்டம் த.மு.மு.க., சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.20 லட்சம் மதிப்பிலான நோன்பு பொருட்கள் வழங்கப்பட்டது.
மாநில பொது செயலாளர் ஹாஜாகனி 110 பேருக்கு சிறு தொழில் உதவியாக ரூ.13 லட்சமும், 1000 பேருக்கு புத்தாடைகள், உணவுப் பொருட்களும் வழங்கினார். நிகழ்வில் த.மு.மு.க., மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான்,மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் பங்கேற்றனர்.

