ADDED : மார் 11, 2024 11:10 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி,- பரமக்குடி அருகே சத்திரக்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராய் டிரஸ்ட் இணைந்து சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாமை நடத்தினர்.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முகாமை துவக்கி வைத்தார். தி.மு.க., போகலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், போகலுார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக், ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி டாக்டர் அஸ்வின், ரத்த வங்கி டாக்டர் ஸ்ரீதேவி, ராய் டிரஸ்ட் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
