/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவி, தாத்தா கொலை : கோர்ட்டில் கணவர் சரண்

ADDED : ஜூலை 25, 2011 09:54 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே புளியங்குடியில் குடும்பத்தகராறில் மனைவி பூப்பாண்டி, தாத்தா கருப்பையாவை கொலை செய்த ஜோதிகிருஷ்ணன், ராமநாதபுரம் கோர்ட்டில் சரணடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடியை சேர்ந்த ஜோதி கிருஷ்ணன்(21). இவருக்கும், மனைவி பூப்பாண்டி (19)க்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால், கோபித்துக் கொண்ட பூப்பாண்டி, தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் ஜோதிகிருஷ்ணன், மனைவியை திரும்பவும் அழைத்து வந்தார். நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டு கதவை உள்புறம் பூட்டிய ஜோதிகிருஷ்ணன், பூப்பாண்டி, தாத்தா கருப்பையா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, தப்பி ஓடி ராமநாதபுரம் கோர்ட்டில் சரணடைந்தார் முதுகுளத்தூர் டி.எஸ்.பி., மாதவன், இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர்.