/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீஸ் பாதுகாப்பு வழங்காததால் உரக்கிடங்கு சுவர் கட்டும் பணி நிறுத்தம்

ADDED : ஜூலை 25, 2011 09:55 PM
கீழக்கரை : கீழக்கரை அருகே நகராட்சி சார்பில் உரக்கிடங்கு சுவர் கட்டுவதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்காததால் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தில்லையேந்தல் ஊராட்சியில் நகராட்சிக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு நமக்கு நாமே திட்டத்தில் 20 லட்ச ரூபாயில் கீழக்கரை நகராட்சிக்கான உரக்கிடங்கு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர். கோர்ட் உத்தரவின் படி கடந்த மே 23ல் விருதுநகர் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், இடத்தை ஆய்வு செய்து ஜூன் 27ல் தடையில்லா சான்று வழங்கினர். இதை தொடர்ந்து ஜூலை 12ல் சுவர் கட்டும் பணியை துவங்கினர். மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை தொடர முடியவில்லை. இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறுல நகராட்சி நிர்வாகம் சார்பில் மனு அளித்தனர். பத்து நாளாகியும் போலீசார் பாதுகாப்பு அளிக்க முன்வராதால் தொடர்ந்து சுவர் கட்டும் பணியை மேற் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.