/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டு பெட்டிகள் சந்திக்கும் கடைசி தேர்தல்
/
ஓட்டு பெட்டிகள் சந்திக்கும் கடைசி தேர்தல்
ADDED : ஆக 25, 2011 11:30 PM
ராமநாதபுரம் : அடுத்த உள்ளாட்சி தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை உள்ளதால், தற்போதைய ஓட்டுப் பெட்டிகள்,
கடைசி தேர்தலை சந்திக்க உள்ளன. உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த,
அதிகாரிகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். ஓட்டளித்தவுடன், ஓட்டுச்
சீட்டுகளை போடுவதற்காக, பயன்படுத்தப்படும் பெட்டிகள், கடந்த ஐந்து
வருடங்களாக துருபிடித்த நிலையில் உள்ளது.
இவற்றை இன்னொரு தேர்தலில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த
தேர்தலிலேயே மாநகராட்சி, கராட்சி பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு
இயந்திரம் பயன்படுத்தும் நிலை உள்ளது. அடுத்த முறை உள்ளாட்சி தேர்தலில்,
வார்டு உறுப்பினர் தேர்தல் வரை, மின்னணு வாக்கு பதிவு இயந்திரம்
பயன்படுத்தும் நிலை உள்ளதால், ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவது இதுவே
கடைசி, என தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.