/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தண்ணீரில் தத்தளிக்கும் பாம்பூர் சமத்துவபுரம் : கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் தவிப்பு

ADDED : ஆக 25, 2011 11:30 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே பாம்பூர் சமத்துவபுரத்தில் மழைநீர்
சூழ்ந்துள்ளதால் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். கால்நடைகளின் கழிவுகளால்
சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாம்பூர்
சமத்துவபுரத்தில் 600க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள
திருவள்ளுவர் சிலையின் கை சேதமடைந்து உள்ளது. சிறுவர் பூங்காவில் உள்ள
விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. சிறுமழை பெய்தாலே சமத்துவபுரத்தை
தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது. நீர் வடியவே பல நாட்கள் ஆகிறது. இதனால் கொசு
உற்பத்தி நிலையமாகி அங்குள்ளோர் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து சமத்துவபுரம் மக்களின் குமுறல்கள்: சண்முகம்: பல மாதங்களாக
தெருவிளக்கு எரியாமல் மக்கள் இருளில் தவிக்கின்றனர். விஷ ஜந்துக்களின்
நடமாட்டம் அச்சுறுத்துகிறது. இங்குள்ள பள்ளியை சுற்றிலும் தண்ணீர்
சூழ்ந்துள்ளது. மாணவர்கள் வருகையும் கணிசமாக குறைந்து வருகிறது. தமிழரசு:
பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பில் அச்சம்
ஏற்பட்டுள்ளது. மழைநீரால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை
அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. முத்துராக்கு:
மேல்நிலை குடிநீர் தொட்டி ஐந்து ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. குடிநீரை
பயன்படுத்தும் மக்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறுவர் பூங்காவை கால்நடைகள் ஆக்கிரமித்துள்ளன. கால்நடை கழிவுகள் ஆங்காங்கே
கிடப்பதால் விளையாட செல்லும் சிறுவர்கள் சிரமப்படுகின்றனர்.