/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் தடைமீறி ஒளிபரப்பாகும் உள்ளூர் சேனல்கள்
/
கீழக்கரையில் தடைமீறி ஒளிபரப்பாகும் உள்ளூர் சேனல்கள்
கீழக்கரையில் தடைமீறி ஒளிபரப்பாகும் உள்ளூர் சேனல்கள்
கீழக்கரையில் தடைமீறி ஒளிபரப்பாகும் உள்ளூர் சேனல்கள்
ADDED : செப் 01, 2011 09:01 PM
கீழக்கரை : கீழக்கரையில் அரசு தடையை மீறி தொடர்ந்து உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பப்படுகிறது.
அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த உள்ளூர் 'டிவி' சேனல்கள், ஆக.,15 முதல் ஒளிபரப்புக்கு தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் புற்றீசல் போல் இயங்கி வந்த உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அரசு தடையை மீறி கீழக்கரையில் நான்கு உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பாகிறது. தங்கு தடையின்றி செயல்படும் இந்த உள்ளூர் சேனங்களை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், அவற்றில் வழக்கம்போல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஜகாங்கீர் அரூஸி கூறியதாவது: சித்த வைத்தியம், மாந்திரீகம் போன்ற போலி வியாபார நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிட்டு, மக்களை திசை திருப்பும் உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பை முற்றிலும் ரத்து செய்ய அரசு தடை விதித்தும், கீழக்கரையில் இயங்கி வருவது சமூக ஆர்வலர்களுக்கு பெரும் வியப்பை அளிக்கிறது, என்றார். ராமநாதபுரம் தாசில்தார் சுந்தரமூர்த்தி கூறும்போது, ''கீழக்கரையில் உள்ளூர் சேனல் நடத்துவது குறித்து இதுவரை தகவல் இல்லை. உடனடியாக ஆய்வு செய்து நிறுத்தப்படும், என்றார்.