sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி வரலாறு காணாத கலவரம் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலி

/

பரமக்குடி வரலாறு காணாத கலவரம் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலி

பரமக்குடி வரலாறு காணாத கலவரம் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலி

பரமக்குடி வரலாறு காணாத கலவரம் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலி


ADDED : செப் 11, 2011 11:04 PM

Google News

ADDED : செப் 11, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கலவரம் வெடித்தது.

இதில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், சென்னை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன், பரமக்குடி டி.எஸ்.பி., கணேசன் தாக்கப்பட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாயினர். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வாகனங்களில் ஏராளமானோர் வந்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிறுவனர் ஜான்பாண்டியன் வருகையை எதிர்பார்த்து பரமக்குடியில் பலர் காத்திருந்தனர். தூத்துக்குடியில் பகல் 12 மணிக்கு ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததும் அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை மறியலில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை. அந்த கும்பலில் இருந்த ஒருவர், செந்தில்வேலன் சட்டையை பிடித்து இழுத்தார். பதிலுக்கு செந்தில்வேலன் கையை ஓங்கினார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால், பதட்டம் ஏற்பட்டு பின் கலவரமாக மாறியது. இதில் சிதறி ஓடிய சிலர் பரமக்குடி டி.எஸ்.பி., கணேசனை கீழே தள்ளிவிட்டனர். விழுந்த அவர் தலை மீது ஒரு கும்பல் பெரிய கல்லை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது. தலையில் காயமடைந்த கணேசனை, அங்கிருந்த போலீசார் பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர். பல இடங்களில் இருந்து பலர் கற்களை வீசியதில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப்மிட்டல், எஸ்.பி., செந்தில்வேலன் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்தனர். காயத்தால் சுயநினைவை இழந்த சந்தீப் மிட்டல் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கலவரம் பெரிதாகியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனம் கொண்டுவந்தனர். கலவரக்காரர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்ததால், அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். சிதறி ஓடிய கும்பல், பல இடங்களில் இருந்து போலீசார் மீது கற்களை வீசியதுடன், அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் பலியாயினர். இவர்கள் யார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.

இந்த சம்பவத்திற்கு பிறகும் பரமக்குடி மெயின் ரோடு உட்பட பல பகுதிகளில் கலவரம் தொடர்ந்தது. வஜ்ரா வாகனத்திற்கு வைக்கப்பட்ட தீயை அணைத்துவிட்டு, திரும்பிய தீயணைப்பு வண்டியும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, பரமக்குடி ஸ்தம்பித்தது. பரமக்குடியின் நான்கு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மதுரை-ராமேஸ்வரம் சென்ற வாகனங்கள் சிவகங்கை, திருவாடானை, ராமநாதபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.



மாலை வரை தொடர்ந்த கலவரம் : நேற்று மாலை 4 மணி வரை தொடர்ந்த கலவரத்தில், ரோட்டில் நின்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பரமக்குடி நடந்த பல திருமணங்களுக்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் உட்பட ரோட்டில் நடமாடியவர்கள் உயிருக்கு பயந்து ஓடி, அருகேயிருந்த வீடுகளில் தஞ்சமடைந்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். சில வாரப்பத்திரிகை போட்டோ கிராபர்களின் கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காயமடைந்த போலீசார் சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரமக்குடி, மஞ்சூர், சத்திரக்குடி உட்பட பரமக்குடியை சுற்றி ஆங்காங்கே அரசு டவுன் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.



ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை : கலவரத்தை தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து பரமக்குடியின் நான்கு எல்லைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்த வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் ஆங்காங்கே கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் நகரை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலை 4 மணி முதல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பரமக்குடி சம்பவத்தை தொடர்ந்து முதுகுளத்தூரில் கடையடைப்பு நடந்தது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை தவிர பிற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் அவதிப்பட்டனர்.










      Dinamalar
      Follow us