sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கலவர பூமியானது பரமக்குடி பெண் போலீஸ் மானபங்கம் : ரயில்கள் ரத்து: மக்கள் பாதிப்பு

/

கலவர பூமியானது பரமக்குடி பெண் போலீஸ் மானபங்கம் : ரயில்கள் ரத்து: மக்கள் பாதிப்பு

கலவர பூமியானது பரமக்குடி பெண் போலீஸ் மானபங்கம் : ரயில்கள் ரத்து: மக்கள் பாதிப்பு

கலவர பூமியானது பரமக்குடி பெண் போலீஸ் மானபங்கம் : ரயில்கள் ரத்து: மக்கள் பாதிப்பு


ADDED : செப் 11, 2011 11:04 PM

Google News

ADDED : செப் 11, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடியில் நடந்த கலவரத்தில், பெண் போலீஸ் டெய்சி மானபங்கம் செய்யப்பட்டார்.

ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்கள் நிறுத்தப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போலீசார் பற்றாக்குறையால், நேற்று நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கலவரக்காரர்கள் பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள ரயில்வே சிக்னல்களையும், ரயில்வே கேட்டையும் உடைத்தனர். கேட் கீப்பர் அறையையும் தாக்கி நொறுக்கினர். இதையடுத்து, நேற்று பகல் 2 மணிக்கு ராமேஸ்வரத்தில் கிளம்பிய திருச்சி பாசஞ்சர் ரயில், பகல் 3 மணிக்கு ராமநாதபுரத்துடன் நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

* ஆர்.எஸ்.மங்கலம் அண்ணாமலைநகரில் இரண்டு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவாடானை, தொண்டி வழியாக ராமநாதபுரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

* கலவரத்தில் பெண் போலீசார் டெய்சி என்பவரின் சீருடையை கலவரக்காரர்கள் கிழித்து மானபங்கம் செய்தனர். இதனால், தப்பி ஓடிய அவர் அருகில் இருந்த வீட்டிற்குள் தஞ்சமடைந்தார். வீட்டிலிருந்தவர்கள் மாற்று உடை கொடுத்தனர்.

* நேற்று மாலை 4 முதல் 4.30 மணி வரை நடந்த கலவரம் மீண்டும் தொடர்ந்தது. இதனால், பரமக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்கள் வெளியேற முடியாமல் மண்டபங்களிலேயே முடங்கினர். பரமக்குடியை விட்டு வெளியூர்களுக்கு சென்றவர்கள் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

* பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டிலிருந்து பொன்னையாபுரம் செல்லும் வழியில் மின் வயர் அறுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி இருளில் மூழ்கியது. அப்போது மர்ம கும்பல் ஒன்று கடைகளின் போர்டுகளை அடித்து நொறுக்கியது.










      Dinamalar
      Follow us