/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடிருந்தும் வீதியில் தூக்கம் : சாயல்குடியில் தீராத தலைவலி
/
வீடிருந்தும் வீதியில் தூக்கம் : சாயல்குடியில் தீராத தலைவலி
வீடிருந்தும் வீதியில் தூக்கம் : சாயல்குடியில் தீராத தலைவலி
வீடிருந்தும் வீதியில் தூக்கம் : சாயல்குடியில் தீராத தலைவலி
ADDED : செப் 15, 2011 09:13 PM
சாயல்குடி : குடிசை மாற்று வாரிய வீடுகள் விரிசலும், தளம் உடைந்தும், மின் இணைப்பும் இல்லாமல் இருக்கின்றன.
இடிந்து விழும் என்ற அச்சத்தில் மக்கள் வீதியில் இரவை கழிக்கின்றனர். சாயல்குடியில் கடந்த ஆட்சியில், குடிசை மாற்று வாரியத்தால் 4.64 கோடி ரூபாயில், வீடில்லாத ஏழைகளுக்காக 192 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், தளம் உடைந்தும், மின் இணைப்பு இல்லாமலும் உள்ளது. கான்கிரீட் வீட்டில் வசிக்கும் ஆர்வத்தில் வந்தவர்கள், வீட்டின் தரத்தைப் பார்த்து குடியிருக்க மனமில்லாமல் வந்த வேகத்திலேயே திரும்பினர். தற்போது 20க்கும் குறைவான குடும்பங்களே வசித்து வருகின்றன. வீடுகள் சேதமடைந்து இருப்பதால் சாப்பாடு, தூக்கம் எல்லாமே வெட்டவெளியில் தான். வீடுகள் நிலை குறித்து அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. வீடுகளை சீரமைக்க முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.