ராமநாதபுரம் - மேலுார் மாநில நெடுஞ்சாலை பணி நிறைவு
ராமநாதபுரம் - மேலுார் மாநில நெடுஞ்சாலை பணி நிறைவு
ADDED : ஜூன் 17, 2026 10:35 PM

பரமக்குடி: பரமக்குடி அருகே ராமநாதபுரம் முதல் மேலுார் வரையிலான மாநில நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில் தங்களது நிலத்திற்கான இழப்பீடு கேட்டு கிராம மக்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து நயினார்கோவில், அண்டக்குடி, இளையான்குடி, சிவகங்கை வழியாக மேலுாரை இணைக்கும் வகையில் 103 கி.மீ., ரோடு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையால் பணிகள் நடந்தது.
இந்நிலையில் நயினார்கோவில் ஒன்றியம் முதலுார், நாகாச்சி, தியாகவன்சேரி, குளத்துார், மும்முடிசாத்தான், தேர்த்தங்கல் கிராம மக்களிடம் நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து ரோடு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் நில உரிமையாளர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.
துாத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர்(தனி) சுப்ரமணியன் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இருந்தனர்.
பணிகள் துவங்கி 3 ஆண்டுகள் ஆன நிலையில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
விரைந்து நிலத்திற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
