/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் அ.தி.மு.க., வினர் தி.மு.க., நிர்வாகி மீது புகார்
/
ராமநாதபுரம் அ.தி.மு.க., வினர் தி.மு.க., நிர்வாகி மீது புகார்
ராமநாதபுரம் அ.தி.மு.க., வினர் தி.மு.க., நிர்வாகி மீது புகார்
ராமநாதபுரம் அ.தி.மு.க., வினர் தி.மு.க., நிர்வாகி மீது புகார்
ADDED : ஜூன் 20, 2025 11:34 PM

ராமநாதபுரம்: பொய்யான கருத்துக்களுடன் கேலி சித்திரம் வரைந்து சமூக வலை தளத்தில் பதிவு செய்த தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :
தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜா நிர்வகித்து வரும் தி.மு.க., ஐ.டி., விங்க் என்ற பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது அவதுாறு ஏற்படுத்தும் வகையில் பொய்யானசெய்தியோடு, அரை நிர்வாண கேலி சித்திரத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதுாறான தகவல்களை நீக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா கூறியதாவது:
எதிர்க்கட்சித்தலைவர் மீது அவதுாறான செய்தி கேலிசித்திரத்தை பதிவு செய்துள்ள தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார். ராமநாதபுரம் அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார், மாவட்ட செயலாளர் நாகராஜன், வழக்கறிஞர் பிரிவு சார்பில் கருணாகரன், மாணவரணி சார்பில் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தனித் தனியாக கூடுதல் எஸ்.பி., சுப்பையாவிடம் புகார் மனு கொடுத்தனர்.