/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழகத்தில் மீன் பிடியில் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்
/
தமிழகத்தில் மீன் பிடியில் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்
தமிழகத்தில் மீன் பிடியில் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்
தமிழகத்தில் மீன் பிடியில் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்
ADDED : ஏப் 23, 2025 02:50 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் கடற்கரையோர 14 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டம் மீன் பிடிப்பில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
தமிழகத்தில் கடற்கரைப்பகுதிகளை கொண்ட 14 மாவட்டங்கள் உள்ளன. இந்தியாவின் மீன் பிடிப்பில் 25 சதவீதம் தமிழகத்தில் இருந்து நடக்கிறது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொடர்ந்து மீன் பிடிப்பதில் முதலிடம் வகிக்கிறது.
மாவட்டத்தில் ரோஜ்மாநகர் முதல் எஸ்.பி., பட்டனம் வரை 208 மீன் பிடி கிராமங்களும், 200 கி.மீ., நீள கடற்கரையும் உள்ளது. மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதிகளில் மீன்பிடி தொழில் நடக்கிறது.
மீன் வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் கூறியதாவது: இம்மாவட்டத்தில் 2024ல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளது. இது கடல் பகுதி, கரைவலை, நன்னீர் மீன் பிடிப்பு, இறால் பண்ணைகள் உள்ளிட்ட அனைத்து வகை மீன் பிடிப்புகளை கொண்டது. இறால், பேச்சாளை, குமுலா வகை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுகின்றன என்றார்.