/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலைகளை அகலப்படுத்த. திட்டம்! 60 கி.மீ.,ல் ஒரு வழி, இரு வழி சாலை அமைக்கப்படுகிறது

ADDED : ஜூலை 15, 2025 10:20 PM

ராமநாதபுரம்; திருவாடானை, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 60 கி.மீ., அகலப்படுத்தியும்புதிதாக ஒருவழி, இரு வழிசாலைகள் ரூ.45 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ள திருப்புல்லாணி, முதுகுளத்துார், உத்தரகோசமங்கை, சிக்கல், திருவாடானை உள்ளிட்ட கிராமங்களில் சாலைகள் குறுகியதாக உள்ளதால் எதிரே வாகனங்கள் வரும் போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும் மழைக்காலத்தில் தரைப்பாலங்கள் மூழ்கி சாலையில் தண்ணீர் தேங்கி சேதமடைந்து விடுகின்றன. இம்மாதிரியான இடங்களில் உயர்மட்ட பாலம், 3.5 மீட்டர் உள்ள சாலை 5 மீட்டராக அகலப்படுத்தவும், போக்குவரத்து அதிகரித்துள்ள இடங்களில் ஒரு வழிசாலையை இருவழிசாலையாக மாற்றவும் ரூ.45 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தில் திருப்புல்லாணி - பிரப்பன் வலசை 4 கி.மீ., இருவழிச்சாலையும், உத்தரகோசமங்கை - எக்ககுடி ஒரு வழிச்சாலையை 1.5 கி.மீ.,வரை அகலப்படுத்தப்படுகிறது.
முதுகுளத்துார் - உத்தரகோசமங்கை சாலை அதாவது சிக்கல் விலக்கு- மல்லல் வரை 4 கி.மீ., இருவழிச்சாலை அமைக்கப்படும். இதே போன்று திருவாடானை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து 60 கி.மீ., வரை அகலப்படுத்தல், உயர்மட்டம் பாலம் அமைக்க ரூ.45 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கிய பிறகு டெண்டர் கோரப்பட்டு பணிகள் ஒரிரு மாதங்களில் துவங்க உள்ளது என்றனர்.