/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் ஆபிஸ் என மழைநீரில் மிதக்கும் ராமநாதபுரம்: போதிய வடிகால் வசதியின்றி தொடரும் அவலம்

ADDED : அக் 01, 2024 04:49 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி சிறிய மழை பெய்தால் கூட பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்குவதால் ராமநாதபுரம் நகரே மிதக்கிறது.
நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தது. போதிய வடிகால் வசதியின்றி நகர், புறநகர் ரோடு, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று காலை அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிப்படாமல் உள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் குளம் போல கலெக்டர் ஆபிஸ், ராமேஸ்வரம் ரோடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்குகிறது.
குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கியதால் பயணிகளும், அரசு மருத்துவமனையில் தேங்கிய நீரால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டனர். ரயில்வே பீடர் ரோடு, ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர் ரோட்டில் குளம்போல தேங்கியது.
இப்பகுதியில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனத்தில் அவதிக்குள்ளாகினர். அரண்மனை பகுதியில் தேங்கிய மழை நீரால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். நகர், புறநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி ஒருமணி நேரத்திற்கு மிதமான மழை பெய்தால் கூட தண்ணீர் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் குளம் போல தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.
எனவே மழைநீர் தடையின்றி ஊருணிகளில் சேமிக்கவும், வாய்க்கால்களை செப்பனிடவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.