/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதில் சிக்கல்
/
ராமநாதபுரம் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதில் சிக்கல்
ராமநாதபுரம் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதில் சிக்கல்
ராமநாதபுரம் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதில் சிக்கல்
ADDED : ஜன 18, 2024 05:37 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் ஷட்டர் பகுதியில் புதர் மண்டியுள்ளதால் கண்மாய்க்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் கொள்ளளவான 71 அடி நிரம்பியதால் அங்கிருந்து வைகை அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மதுரை வைகை ஆற்றின் வழியாக பேரணை, விரகனுார், பார்த்திபனுார் ஆகிய தடுப்பணைகளில் தேக்கப்படுகிறது.
அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு வந்து சித்தனேந்தல் பகுதியில் உள்ள தடுப்பிணையில் தேக்கப்பட்டு அங்கிருந்து கீழ நாட்டார் கால்வாய் வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு செல்கிறது.
உபரியாக உள்ள நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வருகிறது. காவனுார் அருகே காருகுடியில் தடுப்பணை அமைத்து, இங்கு கடலுக்கு திறப்பதற்கு, ராமநாதபுரம் கண்மாய்க்கு செல்வதற்கு ஷட்டர்கள் உள்ளன.
இப்பகுதியில் புதர் மண்டி கிடப்பதால் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தடுப்பணையில் உள்ள ஷட்டர்களை பராமரிக்கும் பொதுப்பணித்துறையினர் அப்பகுதியில் மண்டியிருக்கும் புதர்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.
தற்போது ராமநாதபுரம் பெரியகண்மாயில் போதிய அளவு நீர் இருப்பதால் பாதிப்பில்லை. நெருக்கடியான காலக்கட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை தடுப்பதற்கு ஷட்டர் பகுதியை சுத்தம் செய்து பராமரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.