/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாகும் திட்டம்: ஏழு ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லானது
/
ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாகும் திட்டம்: ஏழு ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லானது
ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாகும் திட்டம்: ஏழு ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லானது
ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாகும் திட்டம்: ஏழு ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லானது
ADDED : மே 30, 2024 03:08 AM
ராமநாதபுரம் 1896 முதல் நகராட்சியாக அமைக்கப்பட்டது. 1959ல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அதன் பின் 1974 மே 1ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
1988 மே 1ல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2008 டிச.2 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
விரிவாக்கம் எப்போது
ராமநாதபுரம் நகராட்சியை அருகில் உள்ள ஊராட்சிகளான பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, அச்சுந்தன் வயல், சூரன்கோட்டை, பேராவூர், ஆர்.எஸ்.மடை ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் அப்போதைய முதல்வர் பழனிசாமி 2017ல் அறிவித்தார். ஆனால் அதுஅறிவிப்போடு நின்று போனது. இன்று வரை ராமநாதபுரம் நகராட்சி விரிவாக்கப்பணிகள் செய்யப்படவில்லை.
மாநகராட்சி ஆகுமா: தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிடும்
நிலையில் அதற்கு முன்ராமநாதபுரம் நகராட்சியைவிரிவாக்கம் செய்து மாநகராட்சியாக அறிவிப்பு செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிராமப்புற ஊராட்சிகளில் பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை ஆகிய பகுதிகளில் நகர்புறம் விரிவாக்கம் அடைந்துள்ளது. இங்கு நகரத்திற்கான பாதாள சாக்கடை உள்ளிட்ட எந்த பணிகளும் செய்யப்படவில்லை.
தமிழக அரசு ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிப்பு செய்து மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மாதவன், வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர்: ராமநாதபுரம் நகராட்சி மிகப்பழமையான நகராட்சி. கலெக்டர் அலுவலகம் முதல் அனைத்தும் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தான் வருகிறது. இப்பகுதிகளில் நகர்புற வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப் படவில்லை.
இது குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். ராமநாதபுரம் நகராட்சியை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக அறிவிக்க அரசு முன் வர வேண்டும் என்றார்.