/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகராட்சியினர் கடைகள், வீடுகளில் வரி வசூல் வேட்டை: குப்பை வாகனத்தை நிறுத்தி மிரட்டுவது தொடர்கிறது

ADDED : மார் 20, 2025 06:55 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி சார்பில் வரி பாக்கியுள்ள வீடுகள், கடைகளில் வரி வசூல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ரூ.பல ஆயிரம் வரி நிலுவை வைத்துள்ள கடைகள் மூன்பு கழிவுநீர், குப்பை அள்ளும் வாகனத்தை நிறுத்தி மிரட்டி வசூலிப்பதால் கடைக்காரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என ரூ.17கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி வருவாய் பிரிவினர் மட்டுமின்றி நகரமைப்பு, சுகாதார பிரிவு அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
வரியை செலுத்தாத வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் பாதாள சக்கடை, குடிநீர் குழாய் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை செய்கின்றனர். இந்தநிலையில் வரியை செலுத்தாமல் நீண்ட காலமாக பாக்கியுள்ள கடைகள் முன்பு குப்பை வாகனம், கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி மிரட்டி வரி வசூலிப்பதால் கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தேவிபட்டினம் ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் கடை வைத்துள்ள ஜாகிர்உசேன், குமார் ஆகியோர் கூறுகையில், ரம்ஜான் மாதமாக இருப்பதால் கட்ட முடியில்லை. வரி பாக்கியை செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளோம். அதற்கு மதிப்பளிக்காமல் எங்களை அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் கடையின் முன்பு குப்பை வண்டியை நிறுத்தி மிரட்டி வசூல் செய்கின்றனர்.
எந்த ஊரிலும் இதுமாதிரி நடப்பது இல்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.