/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சட்டீஸ்கர் வன அதிகாரிகளுக்கு ராமேஸ்வரத்தில் பயிற்சி
/
சட்டீஸ்கர் வன அதிகாரிகளுக்கு ராமேஸ்வரத்தில் பயிற்சி
சட்டீஸ்கர் வன அதிகாரிகளுக்கு ராமேஸ்வரத்தில் பயிற்சி
சட்டீஸ்கர் வன அதிகாரிகளுக்கு ராமேஸ்வரத்தில் பயிற்சி
ADDED : செப் 03, 2011 12:28 AM
ராமநாதபுரம் : சட்டீஸ்கர் வன அதிகாரிகளுக்கு, ராமேஸ்வரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாளக்காடு வன அதிகாரி பயிற்சி கல்லூரியில் பயிற்சி முடித்த 10 ஆண்கள், 14 பெண்கள் உட்பட 24 வன அதிகாரிகள் ராமேஸ்வரத்துக்கு பயிற்சிக்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கு கடல் அரிப்பை தடுக்கும் விதத்தில், சவுக்கு தோப்பு அமைப்பது, காற்று தடுப்பு முறைகளை கையாள்வது, கடல் வாழ் உயிரினங்களை காப்பது, வன உயிரின பாதுகாப்பு சட்ட நடைமுறைகள், சதுப்பு நில காடுகளை உருவாக்குவது, உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு பின் திருச்சி, புதுச்சேரி, சென்னை கிண்டி பாம்பு பண்ணை, முதலை பண்ணை, திருப்பதி, கம்மம், மகாராஷ்டிராவில் உள்ள சாந்தாரப்பூர் ஆகிய பகுதிகளில் பயிற்சிக்கு செல்ல உள்ளனர்.